படம் ரிலீஸான பிறகு கீர்த்தி சுரேஷின் நடிப்பிற்கு பாரட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், பட விழாக்களில் சமந்தா பங்கேற்பதில்லை, கீர்த்தி சுரேஷ் உள்ளதால் பட நிக்ழ்ச்சிகளை அவர் புறக்கணிக்கிறார் என செய்திகள் வெளியானது.
சமீபத்தில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, சாவித்ரி பட குழுவினரை அழைத்து பாராட்டினார். அதில் கூட சமந்தா பங்கேற்கவில்லை. இதனால் சாவித்ரி படம் சம்பந்தமான நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை சமந்தா தவிர்ப்பது ஏன்? என கேள்வி எழுந்தது.
இதற்கு சமந்தா தரப்பில் பின்வருமாரு பதிலளிக்கப்பட்டுள்ளது. வெற்றி விழா, பாராட்டு விழாக்களில் பங்கேற்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் ஆசை. ஆனால் இப்படத்தில் தன்னைவிட கீர்த்தி சுரேஷுக்குதான் எல்லா பாராட்டும் கிடைக்க வேண்டும் என சமந்தா நினைக்கிறாராம்.
தானும் அந்த விழாவில் பங்கேற்றால் கீர்த்திக்கான முக்கியத்துவம் முழுமையாக கிடைக்காமல் போய்விடும். எனவே, படத்திற்கான முழுபலனும் கீர்த்திக்கு கிடைக்க வேண்டும் என்பதாலேயே விழாக்களில் சமந்தா பங்கேற்பதில்லையாம்.