அமைச்சர் ஆகிவிட்ட உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமாக உருவாகி வருகிறது மாமன்னன் திரைப்படம். இந்த படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். மாரி செல்வராஜ் கர்ணன் படத்துக்குப் பிறகு இயக்கி உள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் நடந்தது.
இந்த படம் பக்ரீத் பண்டிகையன்று ஜூன் 29 ஆம் தேதி ரிலீஸ் ஆக வேலைகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. அதற்கான வேலைகள் நடந்து வரும் நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. படத்தின் கதைக்களம் மேற்கு மாவட்ட அரசியலை மையமாக வைத்து உருவாவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் பணியில் தீவிரம் காட்டும் கீர்த்தி சுரேஷ் ஸ்டைலான பேஷியன் உடையில் எடுத்துக்கொண்ட போட்டோக்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.