மாமன்னன் படத்தில் ஜாதி மோதலை உருவாக்கும் கருத்துகள் இருந்தால் நீக்க வேண்டும்- கடம்பூர் ராஜூ

புதன், 28 ஜூன் 2023 (14:11 IST)
உதயநிதி நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்  மாமன்னன். இப்படத்தில்  வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படம் ஜூன் மாதம்  29 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் படத்தின் ப்ரமோஷன் பணிகளில் இயக்குனர் மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில்,  மாமன்னன் திரைப்படத்தின் முன்பதிவு நேற்று   முன்தினம் முதல் இணையத்தில் மாமன்னன் படத்துக்கு முன்பதிவு தொடங்கியது.

இப்படத்தை ரிலீஸுக்கு முன்பே பார்த்த நடிகர் தனுஷ் “மாமன்னன் ஒரு உணர்வுப்பூர்வமான படைபபு என்று கூறி இப்படத்தில் நடித்த நடிகர்களை பாராட்டியதுடன், ஏ ஆர் ரஹ்மான் சாரின் அழகான இசை”என்று கூறியுள்ளார்.

இதற்கு, இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும்  உதயநிதி ஸ்டாலின் இருவரும் தனுஷுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இப்படம் பற்றி அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ  ‘’ஜாதி மோதல்களை ஊக்குவிப்பவர்கள் யாராக இருந்தாலும் கண்டித்தக்கத்து’’ என்று  கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளாதாவது: ‘’ தேவர் மகன் திரைப்படம் வெளியான போது விமர்சனங்களை சந்தித்தாலும் மக்களிடம் வரவேற்பை பெற்றது. மாமன்னன் படத்தில் ஜாதி மோதலை உருவாக்கும் கருத்துகள் இருந்தால்   படக்குழுவினர் அதை நீக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்