கவின் நெல்சன் கூட்டணியின் பிளடி பெக்கர் ரிலீஸ் எப்போது?... வெளியான தகவல்!

vinoth

வியாழன், 20 ஜூன் 2024 (16:39 IST)
இயக்குனர் நெல்சன் சமீபத்தில் ஒரு திரைப்பட நிறுவனத்தை தொடங்கிய நிலையில் அந்நிறுவனத்தின் முதல் படத்தில் கவின் நடித்து வருகிறார்.. இந்த நிலையில் இந்த படத்தின் அதிகாரப்பூர் அறிவிப்பு வீடியோ ஒன்றின் மூலம் வெளியாகியுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தின் வைரல் ஆகி வருகிறது.

நெல்சன் தயாரிப்பில், கவின் நடிப்பில், சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில், ஜென் மார்ட்டின் இசையில் உருவாக இருக்கும் இந்த படத்தின் டைட்டில் ’பிளடி பெக்கர்’ என்று வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தை இப்போது ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி அன்று ரிலீஸ் செய்ய இப்போது திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.  புஷ்பா 2 ரிலீஸ் தள்ளிப் போனதால் பல படங்கள் அந்த தேதியில் ரிலீஸாக பரபரப்பாக  வேலையைத் தொடங்கியுள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்