நூறு கோடி ரூபாய் சொத்து மோசடி வழக்கில் எம்ஆர் விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்டு இருப்பதாக புகார் அளித்துள்ள நிலையில் அவர் தற்போது தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. அவருடைய முன் ஜாமின் மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் மீண்டும் அவரது தரப்பில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகவும் இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருப்பதாகவும் கூறப்படுகிறது.