பவிஷ் நல்ல மாணவன்.. ஆனால் தனுஷ் படிப்பை நிறுத்திவிட்டார் – கஸ்தூரி ராஜா வருத்தம்!

vinoth

செவ்வாய், 18 மார்ச் 2025 (15:33 IST)
பவர் பாண்டி மற்றும் ராயன் ஆகிய படங்களை அடுத்து தனுஷின் இயக்கத்தில்  மூன்றாவது படமாக ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படம் உருவானது. இந்த படத்தில் தனுஷின் அக்கா விமலகீதாவின் மகன் பவிஷ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். தற்கால 2 கே கிட்ஸ் இளைஞர்களின் வாழ்க்கையில் குறுக்கிடும் காதலைப் பற்றிய படமான ‘NEEK’ பிப்ரவரி 21 ஆம் தேதி டிராகன் படத்துடன் ரிலீஸானது.

இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் பவிஷுடன், அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர், மேத்யு தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கட்டூன், ரம்யா ரங்கநாதன் என பலர் நடித்திருந்தனர். ரிலீஸுக்கு முன்பு இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு இருந்த போதும் ரிலீஸுக்குப் பின்னர் ரசிகர்களைப் பெரிதாகக் கவரவில்லை.

இந்நிலையில் தனுஷின் தந்தையும் இயக்குனருமான கஸ்தூரி ராஜா தற்போது பவிஷ் குறித்து பேசியுள்ளது கவனம் பெற்றுள்ளது. ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர் “என் குடும்பத்தில் இருந்து மூன்றாவது தலைமுறை வந்துள்ளது. என் பேரன் பவிஷ் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அவர் இப்போது 12 ஆவதுதான் படிக்கிறார். அருமையான மாணவர். ஆனால் அவனின் மாமா படிப்பை நிறுத்திவிட்டு, நடிக்க அழைத்துச் சென்றுவிட்டார்” எனக் கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்