அந்த படத்த தொடாதீங்கப்பா… ரீமேக் முயற்சிக்கு ரசிகர்கள் எதிர்ப்பு!

வியாழன், 8 ஜூலை 2021 (15:00 IST)
ஏவிஎம் தயாரிப்பில் 1972 ஆம் ஆண்டு உருவான காசேதான் கடவுளடா திரைப்படம் 40 ஆண்டுகளுக்குப் பின் இப்போது ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் வெளியான மிகச்சிறந்த நகைச்சுவை திரைப்படங்களில் ஒன்று ஏவிஎம் தயாரிப்பில் 1972 ஆம் ஆண்டு முத்துராமன் மற்றும் தேங்காய் சீனிவாசன் ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் காசேதான் கட்வுளடா. இந்த படம் அப்போது மிகப்பெரிய வெற்றி பெற்றது. இன்று வரை நகைச்சுவை படங்களில் கல்ட் கிளாசிக்காக உள்ளது. இந்த படத்தை ஸ்ரீதரின் வசனகர்த்தா சித்ராலயா கோபு இயக்கியிருந்தார்.

இந்நிலையில் இப்போது இந்த படத்தை தற்போது வரிசையாக ரீமேக் படங்களாக இயக்கி வரும் ஆர் கண்ணன் ரீமேக் செய்ய முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதில் மிர்ச்சி சிவா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிக்க உள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் ஒரு கிளாசிக்கான படத்தை ரீமேக் செய்து சொதப்பி விட வேண்டாம் என்று ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்