'சர்தார்’ படத்திற்காக கார்த்தி பாடிய பாடல்: ஜிவி பிரகாஷ் டுவிட்!

வெள்ளி, 7 அக்டோபர் 2022 (15:41 IST)
'சர்தார்’ படத்திற்காக கார்த்தி பாடிய பாடல்: ஜிவி பிரகாஷ் டுவிட்!
கார்த்தி நடித்த 'சர்தார்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 
 
இந்த நிலையில் இந்த படத்தில் கார்த்தி ஒரு பாடலை பாடி இருப்பதாக இந்த படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். 
 
மேலும் கார்த்தி பாடிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். கார்த்திக் பாடிய பாடலை கேட்க ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஏறுமயிலேறி என்று தொடங்கும் இந்த பாடலை விவேகா எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்தி ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ள இந்த படத்தில் ரஜிஷா விஜயன் உள்பட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 

Edited by siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்