கார்த்தியின்' விருமன்' பட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்

வெள்ளி, 14 ஜனவரி 2022 (11:07 IST)
நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகிவிருமன் படத்தின் ஃபர்ஸ்ட்லுக்  போஸ்டரை ரிலீஸ் செய்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.

சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில், கார்த்தி நடிப்பில், இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விருமன்.

இப்படத்தின்  பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர்  ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு  வேகமாக நடைபெற்று வருகிறது.  

இப்படத்தின் அப்டேட் எப்போது வரும் என கார்த்தியின் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில், சூர்யாவின் 2 டி நிறுவனம்  விருமன் படத்தின் ஃபர்ஸ்ட்லுக்  போஸ்டரை ரிலீஸ் செய்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்