ஜப்பான் படத்துக்குப் பிறகு நடிகர் கார்த்தி அவர் நலன் குமாரசாமி இயக்கத்தில் ’வா வாத்தியாரே’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங்கை பாதி முடித்த கார்த்தி, இடையில் பிரேம் குமார் இயக்கும் ‘மெய்யழகன்’ படத்தில் நடிக்க சென்றார்.
படத்தில் கார்த்தி, சத்யராஜ், ராஜ்கிரண் மற்றும் கௌதம் கார்த்திக் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தில் கார்த்தி இடையிடையே எம் ஜி ஆராக மாறிவிடுவார் என்றும் ஒருவிதமான பேண்டசி தன்மையோடு இந்த கதை உருவாக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.