ஆண்கள் மட்டும் பங்கேற்கும் விழாவில் முதல் முறையாக பெண்களுக்கு அனுமதி!

Sinoj

புதன், 24 ஜனவரி 2024 (18:30 IST)
ஜப்பான் நாட்டில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று வந்த விழாவில் முதன் முறையாக பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் நாட்டில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று நடத்தும் விழா  Nakes maஎன்ற நிகழ்ச்சி ஆகும்.

இந்த விழாவில், இதுவரை ஆண்கள் மட்டுமே பங்கேற்று நிகழ்ச்சிகள் நடத்தி வந்த நிலையில், 1650 ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக இம்முறை பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Konomiya Shrine என்ற இந்த விழா   நிர்வாகம் 10000 ஆண்கள் பங்கு பெறும் இந்த விழாவில் 40 பெண்களுக்கு மட்டும் அனுமதி அளித்துள்ளது.

குறைந்த அளவிலான ஆடை அணிந்தபடி, உடலில் குளிர்ந்த நீரை ஊற்றிக்கொண்டு, கோயிலை சுற்றி வந்து ஆண்கள் இவ்விழாவை கொண்டாடுவது வழக்கம்.

இந்த விழாவில் ஆண்கள் இப்படி கொண்டாடுவதன் மூலம் அவர்களின் பாவம் நீங்கி சுத்திகரிக்கப்படும் என்பது  நம்பிக்கையாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்