நடிகர் கார்த்தி நடித்த ’கைதி’ திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து தற்போது அவர் நடித்து முடித்துள்ள அடுத்த திரைப்படம் ’தம்பி’. இந்த படத்தில் கார்த்தியும் ஜோதிகாவும் அக்கா, தம்பி கேரக்டர்களிலும் இவர்களின் தந்தையாக சத்யராஜூம் நடித்துள்ளனர்.
கமலஹாசன், கவுதமி நடித்த ’பாபநாசம்’ படத்தை இயக்கிய மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார். இவர் ’96’ படத்தின் மூலம் மிகப்பெரிய புகழ்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.