96 என்ற வெற்றிப்ப்டம் கொடுத்த இயக்குனர் பிரேம் குமார், தற்போது கார்த்தி நடிப்பில் ஒரு படத்தை இயக்க சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் அதை தயாரிக்கிறது. கிராமத்து பின்னணியில் உருவாகும் உருவாகும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க அரவிந்த்சாமி ஒப்பந்தம் ஆகியுள்ளார் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் கும்பகோணத்தில் கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கியது. இந்த படத்துக்காக தன்னுடைய கெட்டப்பை மாற்றியுள்ளார் கார்த்தி. இந்த படத்தில் கதாநாயகியாக பிரபல சீரியல் நடிகை ஸ்வாதி மற்றும் ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு மெய்யழகன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.