மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் ஏப்ரல் 9 ஆம் தேதி காலை படம் வெளியானது. இந்நிலையில் இந்த படத்துக்கு தனுஷ் ரசிகர்கள் உற்சாகமான வரவேற்பைக் கொடுத்து வருகின்றனர். தனுஷ் படத்துக்கு இதுவரை இல்லாத முதல் நாள் வசூல் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்கடுத்த நாட்களிலும் வசூல் குறையாமல் உள்ளது.
ஆனால் கர்ணன் நிலிஸான அடுத்த நாளே ஊரடங்கு அமலுக்கு வந்ததால் பெரிய அளவில் வசூல் குறைந்தது. ஆனால் அதன் பிறகு பெரிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாததால் கர்ணன் தொடர்ந்து திரையரங்குகளில் ஓடியது. இப்போது திரையரங்குகளை மூடச்சொன்னதால் அதன் எஞ்சிய வசூல்தொகையை முற்றிலும் இழந்துள்ளது. இப்படி பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் கர்ணன் படத்தின் லாபத்தில்தான் சிறிது குறைந்துள்ளதாகவும், கிட்டத்தட்ட 15 கோடி ரூபாய் அளவுக்கு தாணுவுக்கு லாபம் கிடைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.