இதையடுத்து இப்போது அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் வேலைகள் தொடங்கியுள்ளதாக தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தெரிவித்திருந்தார். படத்தின் 100 ஆவது நாள் விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் ரிஷப் ஷெட்டி “காந்தாரா படம்தான் இரண்டாம் பாகம். இதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் நடக்கும் கதைதான் அடுத்த பாகத்தில் சொல்லப்பட உள்ளது. இந்த படத்தில் தெய்வத்தின் பின்னணி பற்றி சொல்லப்படும்.” எனக் கூறியுள்ளார்.
இப்போது ஷூட்டிங் தொடங்கி நடந்து வரும் நிலையில் படத்தில் கதாநாயகியாக ருக்மினி வசந்த் இணைந்துள்ளார். இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கன்னடத்தில் ஹிட்டான சப்த சாகரடச்சோ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.