இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரும் சாதனை படைத்த கண்ணான கண்ணே பாடல்!

செவ்வாய், 12 அக்டோபர் 2021 (16:15 IST)
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நான்காவது முறையாக இணைந்து நடித்து கடந்த பொங்கல் தினத்தில் வெளியான படம் விஸ்வாசம். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இப்படம் விவசாயம் , தந்தை - மகள் பாசம் உள்ளிட்டவற்றை மைய கருவாக கொண்டு வெளிவந்தது. 

இந்த படத்திற்கு இமான் இசையமைத்திருந்தார். அனைத்து பாடல்களும் சிறப்பாக அமைந்திருந்த நிலையில் அப்பா - மகள் பாசத்தை வெளிப்படுத்தும் கண்ணான கண்ணே பாடல் அனைவரையும் கவர்ந்தது. இந்த பாடலை சித் ஸ்ரீராம் பாடியிருந்தார். இந்த பாடல் வெளியானதில் இருந்தே கவனம் ஈர்த்து வந்தது.

இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பாடல் தற்போது 15 கோடி பேரால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்