உலகம் முழுவதும் உள்ள பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல்களை மீடூ என்ற ஹேஷ்டேக் மூலம் பதிவு செய்து பேரதிர்ச்சியை ஏற்பதினர். அந்த வகையில், இந்தியாவிலும் பெண்கள், தங்களின் பணியிடங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் நேர்ந்த பல்வேறு பாலியல் துன்புறுத்தல்களை மீடூ ஹேஷ்டேக்கில் பதிவு செய்து தங்களுக்கு நேர்ந்த அவலங்களை வெளிப்படையாக தெரிவித்து, தவறாக நடக்க முயலும் ஆண்களுக்கு தக்க பாடத்தை புகட்டினர்.
இந்நிலையில், தமிழில் மா படத்திலும், பிசாசு படத்திலும் நடித்த கேரள நடிகையும், மாடல் அழகியுமான கனி குஸ்ருதி இந்த விவகாரம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.அதாவது , நான் திரைப்படங்களில் நடிக்க முயற்சி செய்த போது ஒன்றை புரிந்துகொண்டேன்.
ஒரு கலைஞரை யாரும் கட்டுப்படுத்தக்கூடாது. ஆனால், நான் சினிமா வாய்ப்பு தேடி திரைத்துறைக்குள் நுழையும்போது எனக்கு நிறைய கட்டுப்பாடுகளை விதித்தனர். என் பெற்றோர்கள் எனக்கு ஆதரவாக இருந்தனர். எனக்காக பேச எவரும் இல்லை. இந்த படத்தில் உங்கள் மகள் நடிக்க வேண்டுமானால் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என அம்மாவிடமே கூறினார்கள்.