மிரட்டும் 2 நிமிட ‘கங்குவா’ கிளிம்ப்ஸ் வீடியோ.. செம உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள்..!

ஞாயிறு, 23 ஜூலை 2023 (08:15 IST)
சூர்யாவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று அதிகாலை 12.01 மணிக்கு ‘கங்குவா’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தின் வைரல் ஆகி வருகிறது. 
 
இரண்டு நிமிடங்களுக்கு மேல் இருக்கும் இந்த வீடியோவில் பிளாஷ்பேக் போர் காட்சிகள் இடம் பெற்றுள்ளது என்பதும்  வீடியோவின் இறுதியில்  ஆவேசமாக சூர்யாவின் காட்சி இடம் பெற்றுள்ளது அடுத்து அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்  
 
மிகப்பெரிய பொருட்ச அளவில் பிரமாண்டமாக இந்த படம் உருவாகி இருக்கிறது என்பது இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை பார்த்து தெரிய வருகிறது. சூர்யா திஷா பதானி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகிய அந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார் என்பதும் தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்