சென்சாரில் இந்த படம் சிக்கி சான்றிதழ் மறுக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் சம்மந்தமாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த அதன் பின்னர்தான் படத்துக்கு சென்சார் வாங்கப்பட்டது. இதனால் இந்த படத்தின் ரிலீஸ் தாமதமாகிக் கொண்டே சென்றது. தற்போது பல கட்டத் தாமதங்களுக்குப் பிறகு படம் ஜனவரி 17 ஆம் தேதி ரிலீஸானது.
இந்த படம் இந்தியாவில் விமர்சன ரீதியாகவோ வசூல் ரீதியாகவோ பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள சீக்கிய அமைப்புகள் இந்த படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அங்குள்ள திரையரங்குகளுக்கு முகமூடி அணிந்து சென்று பார்வையாளர்களை வெளியேறச் செய்து படத்தை நிறுத்தியுள்ளனர். இதற்கு இந்திய அரசு கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.