பாகுபலி மீது வைத்த நம்பிக்கை என் மீது இல்லை - கமல்ஹாசன் வேதனை

சனி, 13 மே 2017 (15:55 IST)
சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பாகுபலி படம் குறித்து இதுவரை நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவிக்காமல் இருந்தார்.


 

 
இந்நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் “பொருளாதார ரீதியாக பார்த்தால் பாகுபலி ஒரு சிறந்த படம். ஆனால், அந்த படத்தின் பிரமாண்டம் கம்ப்யூட்டர் கிராபிக்ஸில்தான் இருக்கிறது. அப்படக்குழுவினரின் கடின உழைப்பு அதில் தெரிகிறது. அதுவே ரசிகர்களின் கற்பனைக்கு அதிகம் உதவியிருக்கிறது. ஆனால், அதற்காக நாங்கள் ஹாலிவுட்டிற்கு இணையாகவோ, இல்லை அதை தாண்டி செல்வோம் எனப் பேசுவதை நிறுத்தி வையுங்கள். நாம் செல்ல வேண்டியது தூரம் இன்னும் இருக்கிறது” எனக் கூறினார்.
 
மேலும் “ரஜினியின் 2.0 மற்றும் விஸ்வரூபம்-2 என இரண்டாம் பாகங்களை பற்றி இப்போது பேசுகிறார்கள். நான் 30 வருடங்களுக்கு முன்பே கல்யாணராமன் படத்தை 2 இரண்டு பாகம் எடுத்தேன். பாகுபலியில் ஒரு நல்ல விஷயம் என்னவெனில், அதன் இரண்டாம் பாகத்தில், அப்படத்தின் தயாரிப்பாளர்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள். ஆனால், என்னுடைய அன்பே சிவம், பஞ்சதந்திரம் போன்ற படங்களை நான் இரண்டாம் பாகம் எடுக்க விரும்பிய போது, அதன் மீது நம்பிக்கை வைக்கவில்லை. அந்த படங்கள் இரண்டு பாகங்கள் வந்திருக்கலாம்” என அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்