உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் என்ற டேக்கோடு உருவாகியுள்ளது மாமன்னன் திரைப்படம். இந்த படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். மாரி செல்வராஜ் கர்ணன் படத்துக்குப் பிறகு இயக்கி வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் முழுவதும் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. படம் ஜூன் மாதம் 29 ஆம் தேதி ரிலீஸ் ஆக வேலைகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.