அமெரிக்காவில் வித்தியாசமான கெட்டப்பில் கமல்ஹாசன் வெளியிட்ட புகைப்படம்!

vinoth

செவ்வாய், 15 அக்டோபர் 2024 (09:36 IST)
கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் 'தக் லைஃப்'  படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இதில் கமல்ஹாசன், சிம்பு திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், , அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.  ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மணிரத்னம் ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் டெல்லி, ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் நடந்த நிலையில் பின்னர் சென்னையில் செட் அமைக்கப்பட்டு காட்சிகள் படமாக்கப்பட்டு ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது.

இதையடுத்து கமல்ஹாசன் மூன்று மாத பயணமாக அமெரிக்க சென்றுள்ளார். அங்கு அவர் ஏ ஐ தொழில்நுட்பம் குறித்து ஒரு குறுகிய கால வகுப்புக்கு செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து வித்தியாசமான கெட்டப்பில் கமல்ஹாசன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்