தமிழ் சினிமாவில் இசைஞானி எனக் கொண்டாடப்படும் இளையராஜாவின் மகளான பவதாரணி நேற்று கல்லீரல் புற்றுநோய் காரணமாக இயற்கை எய்தினார். இளையராஜாவுக்கு மிகவும் பிடித்த பாடகிகளில் பவதாரணியும் ஒருவர். பவதாரணி சில படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார். பாரதி படத்தில் இளையராஜாவின் இசையில் அவர் பாடிய மயில் போல பொண்ணு ஒன்னு பாடல் உள்ளிட்ட பல பாடல்கள் அவரது பாடும் திறமைக்கு சான்றாக அமைந்தன.
இந்நிலையில் இளையராஜாவின் நெருங்கிய நண்பரான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கலில் “மனம் பதைக்கிறது. அருமை சகோதரர் இளையராஜாவை எப்படி தேற்றுவது என தெரியவில்லை. அவரின் கைகளை மானசீகமாக பற்றிக் கொள்கிறேன். பவதாரணியின் மறைவு பொறுத்துக் கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாதது. இந்த பெருந்துயரில் இளையராஜா மனதை இழக்காதிருகக் வேண்டும். பவதாரணியின் குடும்பத்தாருக்கு என் நெஞ்சார்ந்த இரங்கல்” என தெரிவித்துள்ளார்.