1000 தியேட்டர்களில் கமல்ஹாசனின் ஆளவந்தான்… தயாரிப்பாளர் தாணு செய்த மாற்றம்!

புதன், 15 நவம்பர் 2023 (08:15 IST)
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் கமல்ஹாசன், ரவீனா டண்டன், மனிஷா கொய்ராலா நடித்த 'ஆளவந்தான்' திரைப்படம் கடந்த 2001ஆம் ஆண்டு வெளியாகியது. இந்த படத்தின் பட்ஜெட் அந்த காலத்திலேயே ரூ.20 கோடி. இது இன்றைய மதிப்பில் ரூ.400 கோடி என்பது குறிப்பிடத்தக்க்கது.

இந்த படம் வசூல் ரீதியாக படுதோல்வி அடைந்தது. இதனால் கமலுக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்தது. பல இடங்களில் தாணு கமல்ஹாசனை கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த படம் பற்றி பிரபல பத்திரிக்கையில் எழுதிய தாணு “ஆளவந்தான் என்னை அழிக்க வந்தான்” எனக் கூறியிருந்தார்.

ஆனால் ஒரு கட்டத்துக்குப் பிறகு இந்த படத்துக்கான பார்வையாளர்கள் உருவாகினர். இந்நிலையில் இப்போது 'ஆளவந்தான்' படத்தை டிஜிட்டலாக்கி மீண்டும் திரையரங்குகளில் மீண்டும் ரிலீஸ் செய்ய உள்ளதாக கலைப்புலி எஸ் தாணு அறிவித்துள்ளார். இதன்படி சமீபத்தில் வெளியான போஸ்டரில் 1000 திரையரங்குகளில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்தின் திரைக்கதையை இப்போதைய காலத்துக்கேற்ப மாற்றியமைத்துள்ளதாக தாணு தெரிவித்துள்ளார். ஏற்கனவே ரி ரிலீஸில் கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்