கமலின் வடசென்னை Slang… அரசியல் கருத்து… ‘பத்தல பத்தல’ பாடலில் கவனம் ஈர்த்த அம்சங்கள்!

வியாழன், 12 மே 2022 (09:06 IST)
கமல்ஹாசன் விஜய் சேதுபதி பகத் பாசில் உள்பட பலர் நடித்த விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

கமல்ஹாசன் விஜய் சேதுபதி பகத் பாசில் உள்பட பலர் நடித்த விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படம் வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்துக்கும் அனிருத் இசையமைத்துள்ளார். கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படமாக விக்ரம் உருவாகி வருகிறது. படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் ஆகியவை ஒரே நாளில் மே 15 ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று முதல் சிங்கிளான பத்தல பத்தல பாடல் வெளியானது.

இந்த பாடல் இப்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. பாடலின் சிறப்பம்சமாக கமல் தனது ட்ரேட்மார்க் ஸ்டைலில் வடசென்னை ஸ்டைலில் பாடலை பாடியிருப்பது சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் கமல் ஆரம்பகாலம் தொட்டே ‘வட சென்னை’ வட்டார வழக்கை நீட்டி முழக்கி கொச்சைப் படுத்துவதாகவும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.


மேலும் இந்த பாடலைக் கவனிக்கவைக்கும் அம்சமாக கமல் எழுதியுள்ள அரசியல் வரிகள் அமைந்துள்ளன. ஒன்றிய அரசை விமர்சிக்கும் விதமாக

‘கஜானாலே காசில்லே..
கல்லாலையும் காசில்லே..
காய்ச்சல் ஜூரம் நிறையா வருது தில்லாலங்கடி தில்லாலே..
ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பலே...
சாவி இப்ப திருடன் கையில தில்லாலங்கடி தில்லாலே..
ப்ளாட்டு போட்டு வித்தாக்கா.. நாறிபுடும் ஊரு சனம்
சின்ன மழை வந்தாக்கா..
குள்ள நரி மாமு, கெடுப்பதிவன் கேமு
குளம் இருந்தும் வலைதளத்துல ஜாதி பேசும் மீமு...
ஊசி போடு மாமே வீங்கிடும் பம்-பே’


என்ற அரசியல் வரிகள் கவனிக்கப்பட்டுள்ளன.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்