விக்ரம் படத்தின் திரைக்கதைக்கான காப்புரிமைப் பெற்ற லோகேஷ்! பின்னணி என்ன?

சனி, 23 ஏப்ரல் 2022 (16:49 IST)
கமல்ஹாசன் விஜய் சேதுபதி பகத் பாசில் உள்பட பலர் நடித்த விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

இந்த படம் வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்துக்கும் அனிருத் இசையமைத்துள்ளார். கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படமாக விக்ரம் உருவாகி வருகிறது. விக்ரம் திரைப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ரிலீஸ் செய்ய உள்ளது. இந்நிலையில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள கமல், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகிய மூவரின் கதாபாத்திரங்களைப் பற்றிய அறிமுகமாக ஒரு புதிய வீடியோவை இணையத்தில் வெளியிட, அது இப்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் திரைக்கதையை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் டெல்லியில் இருக்கும் காப்புரிமை பதிப்பு அலுவலகத்தில் பதிவுச்  செய்துள்ளாராம். வழக்கமாக இயக்குனர்கள் திரைக்கதையை தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தில்தான் பதிவு செய்வார்கள். ஆனால் லோகேஷின் இந்த வித்தியாசமான முடிவு ஏன் என்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்