பொன்னியின் செல்வன் பத்தி எம் ஜி ஆர் சொன்ன அட்வைஸ்… மேடையில் கமல் பகிர்ந்த சீக்ரெட்!

புதன், 7 செப்டம்பர் 2022 (08:50 IST)
நடிகர் கமல்ஹாசன் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவில் கலந்துகொண்டார்.

கல்கி எழுதிய பிரபல நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.

இதையடுத்து நேற்று மாலை படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் ஆகியவை பிரம்மாண்டமாக வெளியாகின.இந்த நிகழ்வில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்ட நிலையில், தமிழ் சினிமாவின் இருபெரும் நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய கமல்ஹாசன் “பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கும் உரிமையை எம் ஜி ஆர் வைத்திருந்தார். அவரிடம் இருந்து நான் வாங்கினேன். அப்போது அவர் இதை சீக்கிரமாக படமாக எடுத்துவிடு எனக் கூறினார். என்னால் முடியவில்லை. என்னிடம் இருந்து பலரிடம் அந்த உரிமை சென்றது. கடைசியில் வைராக்யமாக இருந்து மணிரத்னம் அதை படமாக்கிவிட்டார்.” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்