வந்தியத் தேவன் கதாபாத்திரத்துக்கு ரஜினியை பரிந்துரைத்த ஜெயலலிதா… இது எப்போ?

புதன், 7 செப்டம்பர் 2022 (08:37 IST)
பொன்னியின் செல்வன் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீடு நேற்று பிரம்மாண்டமாக நடந்தது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகத்தின் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் ஆகியவை நேற்று மாலை பிரம்மாண்டமாக வெளியாகின.இந்த நிகழ்வில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்ட நிலையில், தமிழ் சினிமாவின் இருபெரும் நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் “நான் பொதுவாக புத்தகத்தின் அளவைப் பார்த்துதான் படிப்பேன். பொன்னியின் செல்வன் 2000 பக்கத்துக்கு மேல் என்றதும் படிக்கவே இல்லை. ஆனால் ஒரு முறை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் வந்தியத் தேவன் கதாபாத்திரத்துக்கு யாரை நடிக்கவைக்கலாம் எனக் கேட்ட போது அவர் என் பெயரைக் கூறினார். அப்போதுதான் நான் ஆர்வமாகி அந்த நாவலைப் படித்தேன்” எனக் கூறினார்.

கல்கி எழுதிய பிரபல நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்