கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்றும், அவரையும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பவர்களையும் கைது செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி போலீஸ் புகார் கொடுத்திருக்கும் நிலையில் கமல்ஹாசன் செய்தியாளர்களை அழைத்து பேட்டி அளித்தார்.
இந்த பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த கமல்ஹாசன், 'ரஜினி தனிக்கட்சி ஆரம்பித்தால் ஆதரவு அளிப்பீர்களா? என்ற கேளவிக்கு 'ரஜினி கட்சி ஆரம்பித்து நியாயமாக இருந்தால் நல்லது நடக்கும். இல்லையென்றால் என் விமர்சனங்கள் அவருக்கும் பொருந்தும்' என்று கூறினார்.