பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கமல்ஹாசனின் பங்களிப்பு… ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்

திங்கள், 11 ஜூலை 2022 (08:55 IST)
பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் வரலாற்று புனைவு படம் “பொன்னியின் செல்வன்”. கல்கி எழுதிய பிரபல நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்தின் டீசர் ரிலீஸ் சமீபத்தில் சென்னையில் நடந்தது. அப்போது பேசிய இயக்குனர் மணிரத்னம் “கடந்த 1980, 2000 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில் முயற்சி செய்தேன். இந்த படம் மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்திருக்க வேண்டிய படம் என்றும் நாடோடி மன்னன் படத்திற்கு பிறகு இந்த படத்தை தயாரிக்க முடிவு செய்தார். ஆனால் சில காரணங்களால் அது முடியவில்லை” என்றும் பேசினார்.

இந்நிலையில் இப்போது பொன்னியின் செல்வன் குறித்து ருசிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பொன்னியின் செல்வன் கதையை விவருக்கும் குரலாக கமல்ஹாசன் படத்துக்குப் பின்னணி பேசியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்