பொன்னியின் செல்வன் இயக்க 3 முறை முயற்சி செய்தேன்: மணிரத்னம்

வெள்ளி, 8 ஜூலை 2022 (21:24 IST)
பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்க நானே மூன்று முறை முயற்சி செய்தேன் என்றும் இப்போதுதான் அதில் சாத்தியமாகி உள்ளது என்றும் இயக்குனர் மணி ரத்னம் கூறியுள்ளார் 
 
கடந்த 1980, 2000 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில் முயற்சி செய்ததாகவும் அவர் தெரிவித்தார். இந்த படம் மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்திருக்க வேண்டிய படம் என்றும் நாடோடி மன்னன் படத்திற்கு பிறகு இந்த படத்தை தயாரிக்க முடிவு செய்தார் என்றும் ஆனால் சில காரணங்களால் அது முடியவில்லை என்றும் கூறினார்
 
ஆனால் அதே நேரத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் எங்களுக்காக அந்த படத்தை விட்டு வைத்துள்ளார் என்றும் கூறினார்,  இந்த படத்தை இயக்க ஒத்துழைப்பு தந்த அனைத்து நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் அனைவருக்கும் நன்றி என்றும் மணிரத்னம் தெரிவித்தார்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்