பிகினி உடையில் ஆளை மயக்கும் காஜல் அகர்வால் - வைரலாகும் சுற்றுலா புகைப்படங்கள்!

திங்கள், 23 டிசம்பர் 2019 (19:28 IST)
தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் முன்னணி நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடித்துவிட்டார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற வேற்று மொழி படங்களிலும் நடித்து தூள் கிளப்பி வருகிறார் காஜல்.
 
சமீபத்தில் இவர் நடித்திருந்த கோமாளி திரைப்படம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதையடுத்து பாரிஸ் பாரிஸ் திரைப்படம் வெளியாகவுள்ளது. இப்படம் வெளிவந்த பிறகு நிச்சயம் காஜல் அகர்வாலின் மார்க்கெட் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையடுத்து கமல் ஹாசனுக்கு ஜோடியாக நடித்துள்ள இந்தியன் 2 படம் வெளிவரும். இப்படி தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்கள்  வெளியாகவுள்ளதால் நிச்சயம் காஜல் அகர்வாலின் மார்க்கெட் உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கலாம். 
 
இதற்கிடையில் அவ்வப்போது கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களின் கவனத்தை திசை திருப்பி வரும் காஜல் அகர்வால் தற்போது குடுமத்தினருடன் இவர் சுற்றுலா சென்று முதன் முறையாக பிகினி உடையில் அழகிய கவர்ச்சியை வெளிப்படுத்தி போஸ் கொடுத்து அசத்தியிருக்கிறார். அத்தோடு அந்த புகைப்படங்களை தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  வெளியிட்ட ஒரே நாளில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்திழுத்த இந்த புகைப்படம் லட்சோப லட்ச லைக்ஸ்களை குவித்து வருகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்