மாப்பிள்ளை உறுதியாகிவிட்டதா? நேர்த்திக்கடன் செய்த காஜல் அகர்வால்!

சனி, 16 நவம்பர் 2019 (17:15 IST)
தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் முன்னணி நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடித்துவிட்டார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற வேற்று மொழி படங்களிலும் நடித்து தூள் கிளப்பி வருகிறார் காஜல்.
இந்நிலையில் தற்போது 34 வயது ஆகும் காஜல் அகர்வாலுக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் முடிவெடுத்து மாப்பிளை தேடி வருகிறார்களாம். சமீபத்தில் தெலுங்கு தொலைக்காட்சியின் பேட்டி ஒன்றில் இது குறித்து பேசிய காஜல் அகர்வால், "எனக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்து  நல்ல மாப்பிள்ளையை தேடி வருகிறார்கள் நானும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளேன் என கூறியிருந்தார். 

 
பின்னர்  தொழிலதிபர் ஒருவரை ஓகே செய்திருப்பதாவும் காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது என்றும் தகவல்கள் வெளியானது இந்நிலையில் தற்போது அதனை உறுதிப்படுத்தும் வகையில்  ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் தர்காவில் குடும்பத்துடன் வந்து வழிபாடு செய்த காஜல்  தலையில் பூக்கூடையை சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தியிருக்கிறார்.  இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை கண்ட நெட்டிசன்ஸ் கல்யாணம் கன்பார்மா காஜல் என கேள்வி கேட்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்