அட்லியின் அடுத்த படத்தில் கமல்ஹாசன், சல்மான் கான்.. ஷூட்டிங் எப்போது?

vinoth

செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (13:12 IST)
பாலிவுட் சென்று ஜவான் என்ற பிளாக்பஸ்டர் படத்தைக் கொடுத்த இயக்குனர் அட்லி , அடுத்து அல்லு அர்ஜுன் நடிப்பில் ஒரு படத்தை இயக்கப் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அந்த படம் பேச்சுவார்த்தையோடு கைவிடப்பட்டது.

இதையடுத்து அவர் சல்மான் கானை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாகவும் அதற்கான திரைக்கதை வேலைகள் நடந்துவருவதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும் சல்மான் கானோடு அந்த படத்தில் மற்றொரு முன்னணி நடிகரும் நடிப்பார் என்று சொல்லப்பட்டது.

இந்நிலையில் அந்த இன்னொரு நடிகராக கமல்ஹாசன் இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது. இருவரும் இணையும் இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கும் எனவும் சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்