பிகிலுக்கு ஆப்பு அடிக்குமா கைதி?

வெள்ளி, 25 அக்டோபர் 2019 (12:13 IST)
தீபாவளி ஸ்பெஷலாக இன்று விஜய்யின் பிகில் மற்றும் கார்த்தியின் கைதி உள்ளிட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளது. இருவரும் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்கள் என்றாலும் விஜய்க்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் என்பதால் நிச்சயம் பிகில் படத்திற்கு ஆடியன்ஸ் அதிகம் வருவார்கள். 


 
ஒருவேளை பிகில் படத்திற்கு டிக்கெட் கிடைக்காத பட்சத்தில் கார்த்தியின் கைதி படத்தை பார்ப்போரும் உள்ளனர். அந்தவகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்துள்ள கைதி நிச்சயம் நல்ல தரமான கதையை கொண்டும் சிறந்த கதை திருப்பங்களை கொண்டும் உருவாகியிருக்கும். இதனால் படத்தின் கதை பொருட்டு பார்த்தால் நிச்சயம் கைதி சிறப்பான படமாகவே பார்க்கப்படும். 
 
எனவே அட்லீ இயக்கத்தில் உருவகியுள்ள பிகில் படத்தை கார்த்தியின் கைதி பீட் செய்யவும் நிறைய வாய்ப்புள்ளது.   

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்