சரவணன் , அபிநயா அன்பழகன், ஸ்ரீ பவி , ஐஸ்வர்யாபாஸ்கரன், ரமேஷ் கண்ணா, கும்கி அஸ்வின், நடேசன், தெனாலி, சன் டிவி அகல்யா என நிறைய பேர் நடித்துள்ளனர்.
ஆதிஷ் உத்ரியன் இசையையும், து. மகிபாலன் ஒளிப்பதிவையும், லட்சுமணன் படத்தொகுப்பையும், சரவணன் சண்டை பயிற்சியையும், சுரேஷ் நடன பயிற்சியையும் கவனித்துள்ளனர்.
கலை, உடை, கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், தயாரிப்பு. இயக்கம் என எட்டு பொறுப்புகளை ஏற்றுள்ள கெளரி சங்கர் படத்தை பற்றி கூறியதாவது:
புரிந்த காதல், புரியாத காதல், புதிரான காதல் என்பது தான் அது. புரிந்த காதல் சுகமானது. புரியாத காதல் சுமையானது. மூன்றாவது புரியாத காதல் முடிவில்லாதது. இதற்காக ஒவ்வொரு காதலுக்கும் ஒவ்வொரு ஜோடிகளை வைத்திருக்கிறேன். இன்றைய இளைய சமுதாயம் சமூகத்தில் வாழ்க்கையை தொலைக்கிறார்களா? அதையே தொடர்கிறார்களா? என்பதை சுவையான திரைக்கதையில் விறுவிறுப்பாக சொல்லி இருக்கிறேன்.