இந்த நிலையில் இந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக ஐதராபாத் மற்றும் மும்பை ஆகிய நகரங்களுக்கு செல்ல ரஜினிகாந்த் திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவத்தால் தமிழகமே துக்கமாக இருக்கும் நிலையில் இந்த விளம்பர நிகழ்ச்சி திட்டத்தை ரஜினிகாந்த் ரத்து செய்துவிட்டார். ஏற்கனவே பிரசன்னா உள்பட ஒருசில நடிகர்கள் தாங்கள் நடித்த படங்களின் புரமோஷன்களை ரத்து செய்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது