என்னது பிரபாஸூக்கு அக்கா வேடமா? நோ சொன்ன ஜோதிகா!

திங்கள், 24 மே 2021 (11:25 IST)
பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தில் வந்த வாய்ப்பை வேண்டாம் என சொல்லிவிட்டாராம் ஜோதிகா.

பாகுபலி படங்களுக்கு பிறகு இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் நடிப்பில் வெளியான பாகுபலி1,2 ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றதை அடுத்து அவர் புகழும் பெருகிறது. மார்க்கெட்டும் எகிறியது.  சூப்பர் ஸ்டார் அளவுக்கு அளவு இமேஜும் ஏகத்தும் அதிகரித்துள்ளது. இதையடுத்து கேஜிஎப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பிரபாஸ். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் தற்போது கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளாராம். இந்த படத்தின் படப்பிடிப்பு பெருமளவு நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை நடிகை ஜோதிகா வேண்டாம் என மறுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. காரணம் என்னவென்றால் அது பிரபாஸுக்கு அக்கா வேடமாம். அதனால் அவர் வேண்டாம் என நிராகரிக்க இப்போது அந்த வாய்ப்பு பாகுபலி ராஜமாத ரம்யா கிருஷ்ணனுக்கு சென்றுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்