தமிழ் சினிமாவில் ஒரு நடிகையின் பெயரிலேயே அவர் நடிக்கும் டைட்டில் அமைவது அபூர்வமாக நடக்கும் விஷயம். இதற்கு முன்னர் 1983ஆம் ஆண்டு சில்க் ஸ்மிதா நடித்த படம் ஒன்றுக்கு 'சில்க் சில்க் சில்க்' என்றும், 1986ஆம் ஆண்டு ரேவதி நடித்த படம் ஒன்றுக்கு 'ரேவதி' என்றும் டைட்டில் வைக்கப்பட்டது.
'நாச்சியார்' படத்தை அடுத்து ஜோதிகா தற்போது மணிரத்னம் இயக்கி வரும் 'செக்க சிவந்த வானம்' படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் வித்யாபாலன் நடித்த பாலிவுட் திரைப்படம் ஒன்றின் ரீமேக் படம் ஒன்றில் ஜோதிகா ரேடியோ ஆர்ஜேவாக நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு 'உங்களுடன் ஜோ' என்ற டைட்டில் பரிசீலனையில் உள்ளது. இந்த டைட்டில் உறுதி செய்யப்பட்டால், ரேவதி, சில்க் ஸ்மிதாவுக்கு அடுத்து தனது பெயரிலேயே டைட்டில் அமைந்த நடிகையின் பட்டியலில் ஜோவும் சேர்ந்துவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.