ஜூன் 7ஆம் தேதி தனுஷின் ‘விஐபி 2’ டீஸர் வெளியீடு

திங்கள், 5 ஜூன் 2017 (11:12 IST)
தனுஷ் நடித்துள்ள ‘விஐபி 2’ படத்தின் டீஸர், ஜூன் 7ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.

 
வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், அமலா பால், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன் நடிப்பில் 2014ஆம் ஆண்டு வெளியான படம் ‘வேலையில்லா பட்டதாரி’. அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி இருக்கிறது. இந்தப் படத்தை, செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். தனுஷ் – அமலா பால் ஜோடியே இந்தப் படத்திலும் நடித்துள்ளது.
 
பாலிவுட் நடிகை கஜோல், மிக முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். முதல் பாகத்துக்கு இசையமைத்த அனிருத்துக்கும், தனுஷுக்கும் ஆகாததால், ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்டர், நேற்று மாலை வெளியிடப்பட்டது. கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் கட்டிடத்தின் முன்னால் தனுஷ் நிற்பது போன்ற போஸ்டர் அது. அத்துடன், இந்தப் படத்தின் டீஸர் வருகிற ஜூன் 7ஆம் தேதி, அதாவது இன்னும் இரண்டு நாட்களில் ரிலீஸாகும் என அறிவித்துள்ளார்  செளந்தர்யா ரஜினிகாந்த்.

வெப்துனியாவைப் படிக்கவும்