ஜோ படத்தில் நடித்த ஏகன் ஹீரோவானார்!

vinoth

சனி, 9 மார்ச் 2024 (12:18 IST)
கடந்த ஆண்டு ரிலீஸான ஜோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அந்த படத்தில் கதாநாயகன் ரியோவின் நெருங்கிய நண்பராக நடித்திருந்தார் ஏகன். இந்நிலையில் இப்போது அவர் கதாநாயகனாக ப்ரமோஷன் ஆகியுள்ளார்.

விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனத்தின் சார்பாக டி.அருளானந்த், மேத்யூ அருளானந்த் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்துக்கு ரகுநந்தன் இசையமைக்க, வைரமுத்து, பா விஜய் மற்றும் கங்கை அமரன் ஆகியோர் பாடல்களை எழுதுகின்ரனர். இந்த படத்தின் ஷூட்டிங் தேனி, ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வந்தது. படத்துக்காக உழவர் சந்தை செட் அமைத்து படமாக்கினார் சீனு ராமசாமி.

இந்த படத்தில் நடித்த போது தோள்பட்டையில் காயமடைந்துள்ளார். அதற்காக அறுவை சிகிச்சை செய்து இப்போது குணமாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். கோழிப்பண்ணை செல்லத்துரை படத்தை மேலும் இரண்டு படங்களில் கதாநாயகனாக ஒப்பந்தம் ஆகியுள்ளதாகக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்