வெற்றிமாறனின் விடுதலை 2 இந்த ஆண்டு ரிலீஸ் ஆகாதா?

vinoth

புதன், 6 மார்ச் 2024 (07:42 IST)
இந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து வெற்றிமாறனின் ஹிட் பட லிஸ்ட்டில் விடுதலையும் இணைந்துள்ளது. இரண்டாம் பாகத்துக்கான ஷூட்டிங் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை என்ற இடத்தில் தொடங்கி பின்னர் திருவள்ளூரில் நடைபெற்றது.

இரண்டாம் பாகத்தில் சூரிக்குக் காட்சிகள் மிகவும் குறைவு என்பதால் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கான ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது விஜய் சேதுபதி சம்மந்தப்பட்ட காட்சிகளை வெற்றிமாறன் படமாக்கி வரும் நிலையில் வெற்றிமாறன் முடிவே இல்லாமல் ஷூட்டிங்கை நடத்திக் கொண்டுவருகிறார் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் இந்த பாகத்தில் இப்போது மஞ்சு வாரியர், கென் கருணாஸ் என பல புதிய கதாபாத்திரங்களை சேர்த்துள்ளார் இயக்குனர் வெற்றிமாறன். அதுமட்டுமில்லாமல் வாத்தியார் கதாபாத்திரத்தின் பிளாஷ்பேக் காட்சிகளும் இடம்பெறுகின்றனவாம். அதனால் ஷூட்டிங் இழுத்துக் கொண்டே செல்கிறது. இதனால் விடுதலை படத்தின் ஷூட்டிங் முடியவே இன்னும் ஐந்து மாதங்கள் ஆகும் எனத் தெரிகிறது. அதனால் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டுதான் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்