பிரபல காமெடி நடிகர் வீட்டில் 41 சவரன் நகைகள் கொள்ளை

புதன், 24 ஏப்ரல் 2019 (09:23 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் இமான் அண்ணாச்சி. தொலைக்காட்சியில் பிரபலமாகி அதன்மூலம் சினிமாவுக்கு வந்த இவர், தனது வழக்கமான நெல்லை பாஷையில் காமெடி செய்து ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறார்.
 
இந்த நிலையில் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் நடிகர் இமான் அண்ணாச்சி வசித்து வரும் நிலையில் நேற்றிரவு அவரது வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து கொள்ளையடித்துள்ளனர். முதல்கட்ட விசாரணையில் இமான் அண்ணாச்சி வீட்டில் 41 சவரன் நகை மற்றும் ரூ.10000 ரொக்கம் கொள்ளை போனதாக தெரிகிறது
 
இதுகுறித்து இமான் அண்ணாச்சி தரப்பில் தரப்பட்ட புகாரை அடுத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னையின் பரபரப்பான முக்கிய பகுதியில் இந்த கொள்ளை நடந்துள்ளது அந்த பகுதியினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்