பொன்னியின் செல்வன்… ஜெயராம் கதாபாத்திரம் வெளியானது!

செவ்வாய், 20 ஜூலை 2021 (10:54 IST)
பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயராம் நடிக்கும் கதாபாத்திரம் பற்றிய தகவல் கசிந்துள்ளது.

தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவரான இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. தென்னிந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் எல்லாம் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பை துரிதமாக முடிக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளாராம்.

கொரோனா இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்ட படப்பிடிப்பு தற்போது தொடங்கி பாண்டிச்சேரியில் நடந்து வருகிறது. இந்நிலையில் படத்தில் நாவலின் முக்கியக் கதாபாத்திரமான ஆழ்வார்க்கடியான் நம்பி கதாபாத்திரத்தில் நடிகர் ஜெயராம் நடித்து வருகிறாராம். அதற்காக ஜெயராம் மொட்டை அடித்து தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்