நான்கு மாதங்களில் மூன்று படங்கள் … ஜெயம் ரவியின் ரிலீஸ் வரிசை!

திங்கள், 18 செப்டம்பர் 2023 (07:21 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ரிலீஸ் ஆனது. அதையடுத்து இந்த ஆண்டுக்குள் அவர் நடிக்கும் மூன்று படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகவுள்ளன.

ஜெயம் ரவி ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள இறைவன் என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் ஒருவழியாக ஷூட் முடிந்து இப்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 28 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாக உள்ளது.

இதையடுத்து ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் நடிப்பில் எம் ராஜேஷ் இயக்கிவரும் இன்னும் பெயரிடப்படாத திரைப்படத்தை நவம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார்.

இதையடுத்து டிசம்பர் 22 ஆம் தேதி ஜெயம் ரவி நடிக்கும் மற்றொரு திரைப்படமான சைரன் ரிலீஸ் ஆகவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த திரைப்படத்தை அவரது மாமியார் சுஜாதா தயாரித்து வருகிறார். இந்த படத்தை ஆண்டனி பாக்கியராஜ் என்பவர் இயக்க இருப்பதாகவும் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்