இந்த நிலையில், மும்பையில் உள்ள பாந்த்ரா என்ற பகுதியில் உள்ள திரையரங்கில் புஷ்பா 2 திரைப்படம் ஓடிக்கொண்டிருந்த போது, திடீரென அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் தியேட்டரில் ஸ்பிரே அடித்தார். இதனால் படம் பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்களுக்கு இருமல், தும்மல் மற்றும் தொண்டை எரிச்சல் ஏற்பட்டது. இதன் காரணமாக படம் நிறுத்தப்பட்டது.
இது குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் விரைந்து வந்து தியேட்டரில் விசாரணை செய்தனர். ஆனால் அதற்குள் அந்த மர்ம நபர் தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து வழக்கு பதிவு எதுவும் செய்யவில்லை என்றாலும், இந்த சம்பவம் காரணமாக சில நிமிடங்கள் தியேட்டரில் பரபரப்பு ஏற்பட்டது.