ஜல்லிக்கட்டு வெற்றி; 1100 கிலோ கேக்; உலக ரெகார்டை முறியடிக்கும் ராகவா லாரன்ஸ்!

சனி, 18 பிப்ரவரி 2017 (10:44 IST)
ஜல்லிக்கட்டு வெற்றியைக் கொண்டாட பிரமாண்டமாக 1100 கிலோ கேக்கை மாணவர்களுடன் சேர்ந்து இன்று வெட்டுகிறார்  ராகவா லாரன்ஸ்.

 
ஜல்லிக்கட்டுக்காக நடந்த மாணவர் மற்றும் இளைஞர்களின் போராட்டத்தில் பங்கேற்று, உதவிகளையும் செய்தார் ராகவா  லாரன்ஸ். இதற்காக அவர் முதல்வராக இருந்த பன்னீர் செல்வத்தைச் சந்தித்தார். ஜல்லிக்கட்டு போராட்டம்  வெற்றியடைந்ததுமே, பத்திரிகையாளர் சந்திப்பில் இதனை பிரமாண்டமாகக் கொண்டாட வேண்டும் என்று கூறியிருந்தார்.
 
அதன்படி போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்களுடன் இணைந்து ஜல்லிக்கட்டு வெற்றி விழாவை 1100 கிலோ பிரமாண்டமான  கேக் வெட்டி இன்று கொண்டாடுகிறார் லாரன்ஸ்.
 
இதற்கு முன்பு 1040 கிலோ கேக் தான் உலக ரெகார்டாக பதிவானது. அதை முறியடிக்கும் விதமாக 1100 கிலோ அளவில்  திரைப்பட கலைஞர்கள், நடிகர்கள் முன்னிலையில் கேக்வெட்டி கொண்டாடுகிறார். அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள  வாவின் சிக்னல் அருகே இந்த கொண்டாட்டம் நடக்கவிருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்