ரஜினியின் அடுத்த படத்தை இயக்குகிறாரா ஜெய்பீம் ஞானவேல்?

வெள்ளி, 13 ஜனவரி 2023 (16:26 IST)
ரஜினி ஜெயிலர் மற்றும் லால் சலாம் படங்களுக்கு அடுத்து எந்த படத்தில் நடிக்க போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் மற்றும் லால் சலாம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதன் பின்னர் அவர் நடிக்கும் படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ரஜினியின் அடுத்த படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது சம்மந்தமாக ரஜினி, அவரிடம் கதை கேட்டதாகவும் ஆனால் அந்த கதையில் திருப்தி இல்லாததால் அந்த கதையில் நடிக்க மறுத்ததாகவும் சொல்லப்படுகிறது.

இதையடுத்து பி வாசுவிடம் ரஜினி கதை கேட்டு ஓகே சொன்னதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது ஜெய்பீம் புகழ் இயக்குனர் ஞானவேலிடம் கதை கேட்டு அந்த கதைக்கு சம்மதம் சொல்லியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் ரஜினியிடம் அடுத்த படத்தை ஞானவேல் இயக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்