சிம்புவை நடிக்கவே கூடாது என நான் சொல்லவில்லை…. ரெட் கார்ட் குறித்து ஐசரி கணேஷ் அளித்த பதில்!

vinoth

வெள்ளி, 17 மே 2024 (16:14 IST)
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் ’தக்லைஃப்’ திரைப்படத்தில் சிம்பு நடிப்பதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியான நிலையில் சில தினங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்,  கமல் - மணிரத்னம் படத்தில் சிம்பு நடிக்க கூடாது என தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் அவர் தனது தயாரிப்பில் உருவாக இருந்த ’கொரோனா குமார்’ என்ற படத்தில் நடிப்பதாக சிம்பு ஒப்புக்கொண்டிருந்தார் என்றும் ஆனால் அவர் அந்த படத்தில் நடிக்கவில்லை என்றும் தன்னுடைய படத்தில் நடித்து முடிக்காமல் அவர் வேறு எந்த படத்திலும் நடிக்க கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் ’கொரோனா குமார் படத்தில் நடித்து முடிக்காமல் வேறு படத்தில் நடிக்க கூடாது என்று தயாரிப்பாளர் சங்கத்தின் ரெட் கார்டு சிம்பு மீது உள்ளது என்றும் அதை மீறி அவர் எப்படி ’தக்லைஃப்’ படத்தில் நடிக்கலாம் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் நேற்று நடந்த பிடி சார் பட ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் “சிம்பு எந்த படத்திலும் நடிக்கவே கூடாது என நான் சொல்லவில்லை. என் படத்தில் நடித்து முடித்துக் கொடுத்துவிட்டு அவர் தக் லைஃப் படத்தில் நடிக்கட்டும் என்றுதான் சொல்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்