'லியோ’ வியாபாரத்தை முந்தியது ‘தக்லைஃப்’.. வெளிநாட்டு உரிமை இத்தனை கோடியா?

Siva

செவ்வாய், 14 மே 2024 (06:45 IST)
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தக்லைஃப்’ படத்தின் வியாபாரம் தொடங்கியுள்ள நிலையில் இந்த படத்தின் வியாபாரம் விஜய்யின் லியோ படத்தை முந்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜயின் லியோ படத்தின் வெளிநாட்டு உரிமை வியாபாரம் ரூபாய் 60 கோடிக்கு நடந்த நிலையில் ‘தக்லைஃப்’ படத்தின் வியாபாரம் 63 கோடிக்கு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. நேற்று ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் இந்த படத்தின் வெளிநாட்டு நிலை உரிமையை ஏபி இன்டர்நேஷனல் மற்றும் ஹோம் மீடியா நிறுவனங்கள் இணைந்து பெற்றுள்ளதாக அறிவித்த நிலையில் 63 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

கமல்ஹாசன் உடன் சிம்பு இந்த படத்தில் இணைந்ததாலும் , மணிரத்னம் - கமல்ஹாசன் நீண்ட இடைவேளைக்கு பிறகு இணைந்ததாலும் ஏ ஆர் ரஹ்மானின் இசை காரணமாகவும் இந்த படத்தின் வியாபாரம் அபாரமாக இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த படத்தின் சேட்டிலைட் உரிமையை விஜய் டிவி வாங்கி இருப்பதாக கூறப்படும் நிலையில் அடுத்தடுத்து நடைபெறும் பிசினஸை பார்க்கும்போது இந்த படம் விக்ரம் படத்தின் வியாபாரத்தை மிஞ்சிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, நாசர், அலி ஃபைசல், பங்கஜ் திரிபாதி, அசோக் செல்வன், ஜோஜு ஜார், ஐஸ்வர்யா லட்சுமி, வையாபுரி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். 

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்